வன்முறை மற்றும் போர் எந்த தீர்வுக்கும் வழிவகுக்காது
மெரினா ராஜ் – வத்திக்கான்
மோதல்கள் மற்றும் போர்கள் எந்தத்தீர்வுக்கும் வழிவகுக்காது மாறாக மரணத்தையும் அழிவையும் மட்டுமே கொண்டு வருகின்றன. எனவே போரை, ஆயுதங்களை நிறுத்துக்கள் என்று கூறி, போரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இஸ்ரயேல் மக்களுக்கு தன் ஆழ்ந்த இரங்கல்களையும் செபத்தினையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 8 ஞாயிற்றுக்கிழமை திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ செபிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
"போர் ஒரு தோல்வி: ஒவ்வொரு போரும் ஒரு தோல்வி! என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் உக்ரைன் மக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
நூற்றுக்கணக்கான மரணங்கள் மற்றும் காயங்களை ஏற்படுத்திய வன்முறை இன்னும் அதிகரித்து வரும் இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதை நான் அச்சம் மற்றும் வேதனையுடனும் கவனித்து வருவதாக கூறிய திருத்தந்தை அவர்கள், வன்முறையினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆன்மிக நெருக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் எடுத்துரைத்தார்.
அக்டோப்ர 7 சனிக்கிழமை ஹமாஸ்ஸில் நடந்த தாக்குதலினால் இதுவரை கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 600 ஆக உயர்ந்துள்ளது என்று ஹாரெட்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்