சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

குழந்தைகள் போல தூய்மையான உள்ளம் கொண்டவர்களாக...

நவம்பர் 6 ஆம் நாள் பிற்பகலில் வத்திக்கான் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் முயற்சியால், சிறாரிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சியைப் பற்றி நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் வத்திக்கான்

குழந்தைகளைப் போல தூய்மையான உணர்வுகளுடன் வாழவேண்டும். ஏனென்றால், குழந்தைகள் போல தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் கடவுளின் அரசைச் சார்ந்தவர்கள் என்றும், குழந்தைகள் தெளிவான உறவு, அயலாரின் வரவேற்பு, படைப்பு என அனைத்தையும் மதிக்கின்றார்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 1 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையினை அடுத்து, நவம்பர் மாதம் நடைபெற உள்ள குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மூவேளை செப உரையின் போது தன்னுடன், ஐந்து கண்டங்களை அடையாளப்படுத்தும் வகையில் 5 சிறாரை அருகில் வைத்து உரையாற்றிய திருத்தந்தை அவர்கள், நவம்பர் 6 ஆம் நாள் பிற்பகலில் வத்திக்கான்  திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் முயற்சியால், சிறாரிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சியைப் பற்றி நினைவுகூர்ந்தார்.  

சிரியாவைச் சார்ந்த 7 வயது பமீலா, உக்ரைனைச் சார்ந்த 7 வயது கிரகரி, பெனினைச்சார்ந்த 10 வயது அலேசியா, குவாத்தமாலாவை சார்ந்த 7 வயது அலெசாந்திரோ, ஆஸ்திரேலியாவைச்சார்ந்த 9 வயது தாமஸ் ஆகியோர் திருத்தந்தையின் மூவேளை செப உரையின் போது அவருடன் இருந்தனர்.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளை அடையாளப்படுத்தினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2023, 13:08