இஸ்ரயேல் பாலஸ்தீன் போர் இஸ்ரயேல் பாலஸ்தீன் போர்  (AFP or licensors)

போரால் பாதிக்கப்படும் மக்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம்

உக்ரைன், பாலஸ்தீனம் இஸ்ரயேல் பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலக அமைதிக்காக அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை தவம் மற்றும் உண்ணா நோன்பிற்கான நாளாக அனுசரித்து செபத்தில் இணைந்த உலக மக்கள் அனைவருக்கும் நன்றி என்றும், உக்ரைன், பாலஸ்தீனம் இஸ்ரயேல் போன்ற  பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமை வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் உலக அமைதிக்காக செபிக்கக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காசாவில் மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவாக பயணக்கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எப்போதும் தோல்வியைத் தரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுதப்பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும்,  போர் இடை நிறுத்தம் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.   

எருசலேம் புனித பூமியின் காவலராகிய  பிரான்சிஸ்கன் அருள்பணி Ibrahim Faltas அவர்களின் பெயரை மேற்கோள்காட்டி நெருப்பாகிய போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2023, 12:39