மோதல்கள், கலவரங்களால் நம் நம்பிக்கைச் சுடர் அணைய வேண்டாம்.
திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்
உலகின் பல்வேறு பகுதிகளில் போர் இடம்பெற்றுவரும் நேரத்தில், அவைகளைக் கண்டு நாம் நம்பிக்கையை இழக்காதிருப்போம் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் பல்வேறு பகுதிகளில் போரின் அகோரம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மோதல்களும் கலவரங்களும் நம்பிக்கைச் சுடரை மறைத்திட அனுமதிக்க வேண்டாம் என்றும், அனைத்து கலாச்சாரங்களும் தூய ஆவியாரின் நல்லிணக்க வெளிப்பாட்டிற்கு உட்படும் வகையில், அமைதியின் அவசியத்தையும், அவசரத்தையும், அன்னை மரியாவிடம் ஒப்படைப்போம் என்றும் அக்டோபர் 28, சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் மட்டும் இதுவரை 5107 டுவிட்டர் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை இதுவரை 1 கோடியே 86 இலட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்