புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை (கோப்புப் படம்) புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை (கோப்புப் படம்)  

புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர்மீது அக்கறை காட்டுவோம்

வழக்கமான மற்றும் பாதுகாப்பான இடம்பெயர்வை ஊக்குவிக்க உறுதியான திட்டங்களை உருவாக்க உங்களை ஊக்குவிக்கிறேன் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒவ்வொருவருக்கும் இடம்பெயராமல் இருக்க உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், புலம்பெயர்ந்தோர் வறுமையாலும், அச்சத்தாலும், விரக்தியினாலும் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறுகிறார்கள் என்றும் இந்த காரணங்களை அகற்றி, கட்டாய இடம்பெயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவரவர் பொறுப்புகளுக்கு ஏற்ப அனைவருக்கும் பொதுவான அர்ப்பணிப்பு தேவை என்று  கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Free to leave, free to stay என்ற தலைப்பில் இடம்பெயர்தலின் எட்டாவது கொண்டாட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய வாழ்த்துரையில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பிறரன்பு அமைப்பு உட்பட இந்த முக்கியமான நிகழ்வின் ஏற்பாட்டாளர்களைத் தான் மனதார வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இக்கொண்டாட்டத்தின் கருப்பொருள் இந்த ஆண்டு உலக இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினச் செய்தியை எதிரொலிக்கிறது என்றும், இது இடம்பெயர்வதா அல்லது தங்குவதா என்பதை சுதந்திரமாகத் தோர்ந்தெடுக்கும் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கமான மற்றும் பாதுகாப்பான இடம்பெயர்வை ஊக்குவிக்க உறுதியான திட்டங்களை உருவாக்க உங்களை ஊக்குவிக்கிறேன் என்றும், இந்த வழிகளில், புலம்பெயர்ந்தோரின் கனவுகளை ஊகிக்கும் குற்றவியல் வலைப்பின்னல்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட வேண்டியது அவசியம் என்றும், அதேவேளையில், பாதுகாப்பான வழிகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவதும் அவசியத் தேவையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இடம்பெயர்வு கொள்கைகள் மற்றும் திட்டங்களின் வடிவமைப்பில் மனித நபரின் மையத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்த நீங்கள் முன்மொழிகிறீர்கள் என்றும், அதிலும் குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறார் போன்ற மிகவும் பாதிக்கப்படக் கூடிய குழுமங்கள்மீதும் உங்கள் கவனத்தை செலுத்துகிறீர்கள் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

நாம் என்ன செய்ய முடியும், ஆனால் நாம் என்ன செய்வதை நிறுத்த வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதன் வழியாகத் தொடங்கும் நமது அர்ப்பணிப்பு. ஆயுதப் போட்டி, பொருளாதாரக் காலனித்துவம், பிறருடைய வளங்களைச் சூறையாடுதல், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியை பாழ்ப்படுத்துதல் ஆகியவற்றை நிறுத்துவதற்கு நாம் உழைக்க வேண்டும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2023, 14:43