திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையை உள்ளடக்கிய தீர்வு

உலக அடிமட்டத்திலிருந்து எழும் விண்ணப்பங்களும், ஒருவருக்கொருவர் உதவுவதிலும் ஆதரவு வழங்குவதிலும் தங்களை அர்ப்பணித்துள்ள மக்களும் ஒன்றிணையும்போதே வெற்றி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இவ்வுலகின் அடிமட்ட மக்களின் விண்ணப்பங்களும், அவர்கள் குறித்த அக்கறையுள்ள மக்களின் அர்ப்பணங்களும் ஒன்றிணைந்து அதிகார வர்க்கத்தின் கதவுகளைத் தட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பாதிப்பை உள்ளடக்காத தீர்வுகளைக் காணவேண்டும் என ஆவல் கொள்கின்றேன் என டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 24ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உலகம் முழுவதிலும் அடிமட்டத்திலிருந்து எழும் விண்ணப்பங்களும், ஒருவருக்கொருவர் உதவுவதிலும் ஆதரவு வழங்குவதிலும் தங்களை அர்ப்பணித்துள்ள மக்களும் ஒன்றிணையும்போது, அவர்களால் அதிகாரத்தின் ஆதாரங்களுக்கு  அழுத்தம் கொடுக்க முடியும் என கூறுவதுடன், இது குறித்த எந்த ஒரு தீர்வும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என மேலும் விண்ணப்பித்துள்ளார்.

@Pontifex என்னும் பெயரில் டுவிட்டர் செய்திகளை வெளியிடும் திருத்தந்தையின் பக்கத்தில் இதுவரை 5103 ஆங்கிலக் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடர்ந்து குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுவரும் இந்த டுவிட்டர் பக்கத்தை இதுவரை 1 கோடியே 86 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2023, 15:59