திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

ஜெர்மனி தலத்திருஅவைக் குறித்து திருத்தந்தை அக்கறை!

இந்தக் கடிதத்தில் தனது முக்கியமான ஆவணத்தை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவர் நமக்கு வழியைக் காட்டுவார் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் உரைத்துள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜெர்மன் தலத்திருஅவையின் பெரும் பகுதியினர் உலகளாவிய திருஅவையின் பொதுவான பாதையில் இருந்து மேலும் விலகிச் செல்ல அச்சுறுத்தும் பல்வேறு சூழல்கள் குறித்துத் தானும் பெரிதும் கவலை கொள்வதாகக் கடிதம் ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

ஜெர்மனியிலுள்ள தலத்திருஅவையின் ஒன்றிணைந்த பயணத்தின் (synodal journey) முன்னேற்றங்கள் குறித்து பெண் பேராசிரியர்கள் நால்வர் தங்களின் அக்கறைக் குறித்து தனக்கு எழுதியுள்ள கடித்ததிற்குப் பதிலளிக்கும் விதமாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

நவம்பர் 10, வெள்ளியன்று, எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு தனது கவலைகள் மற்றும் அக்கறையை வெளிப்படுத்தியுள்ள அதேவேளையில், இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதே அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கடிதனமானது, நெறிமுறைசார் இறையியலாளர் Katharina Westerhorstmann, இறையியலாளர் Marianne Schlosse, தத்துவயிலார் Hanna-Barbara Gerl-Falkovitz மற்றும் செய்தி வெளியீட்டாளர் Dorothea Schmidt ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அண்மைய மாதங்களில் முடிவடைந்த ஜெர்மன் ஒன்றிணைந்த பயணத்தின் முடிவுகள் குறித்த சந்தேகங்களையும் அச்சங்களையும் வெளிப்படுத்தி இந்த நான்கு பேராசிரியர்களும், கடந்த நவம்பர் 6 ஆம் தேதி திங்களன்று, திருத்தந்தைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

ஒன்றிணைந்த பயணத்தின் (Synodal process) இந்த நான்கு முன்னாள் பிரதிநிதிகளும் குறிப்பாக ஒரு உத்தரவு மற்றும் முடிவெடுக்கும் குழுவின் அறிமுகத்தைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த பயண குழுவொன்றை நிறுவும் யோசனைக் குறித்து அக்கறை கொண்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய அமைப்பு, தீர்வின் தொடர்புடைய உரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, கத்தோலிக்கத் திருஅவையின் புனித அமைப்புடன் ஒத்திசைக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2019- ஆண்டு, ஜூன் 29-ஆம் தேதியன்று, ஜெர்மனியின் இறைமக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உரோமை ஆயர் மற்றும் திருத்தந்தை என்ற முறையில், அந்நாட்டுத் தலத்திருஅவைகளின் தலைவர்களை அழைத்து செயல்பாட்டு சறுக்கல்கள் அல்லது கருத்தியல் குறைப்புகளில் சிக்காமல், நற்செய்தியின் சரியான பாதையில் நடக்க தான் அறிவுறுத்தியதையும் அக்கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.

இறையியல் மற்றும் தத்துவவியல் சார்ந்த இந்நால்வரின் அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்காகவும், நம்பிக்கைநிறைந்த அவர்களின் சான்று வாழ்விற்காகவும் தான் மனமுவந்து நன்றி தெரிவிப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தனக்காவும், பொது ஒற்றுமைக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறும் அவர்களை இக்கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2023, 11:18