இளைஞர்கள் திருஅவையின் மகிழ்வின் நம்பிக்கை.
திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்
26 நவம்பர் 2023 இல் நடக்கவிருக்கும் 38வது உலக இளைஞர் தினத்திற்காக, திருவிவிலியத்தின் உரோமையர் 12:12 எடுத்துரைக்கும் நம்பிக்கையில் மகிழ்தல் என்ற வசனத்தை மையமாகக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதன் தொடர்ச்சியாக இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இளைஞர்களே திருஅவையின் மகிழ்ச்சியான நம்பிக்கை எனவும், எப்போதும் நகர்ந்து கொண்டிருக்கும் மனிதகுலத்தின் நம்பிக்கையாக இருப்பவர்களும் அவர்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இளைஞர்களின் கைகளைப்பிடித்து நம்பிக்கையின் பாதையில் தான் நடக்க விரும்புவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஆர்வத்தை டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்