திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

வேறுபாடுகளை களைந்து அன்புகூர்வோம்!

நிலையற்ற நம் வாழ்வைப் பாதுகாக்கப்பதற்காக நாம் செய்துவரும் அலட்சியத்தையும் சாதாரணமான சாக்குபோக்குகளையும் அழித்தொழிப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒருவரின் தோலின் நிறம், சமூக அந்தஸ்து, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் அனைவரும் நமக்கு அடுத்திருப்போரே என்பதை மனதில் கொண்டு வாழ்வோம் என்று அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை

நவம்பர் 16, இவ்வியாழனன்று, வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நிலையற்ற நம் வாழ்வைப் பாதுகாக்கப்பதற்காக நாம் செய்துவரும் அலட்சியத்தையும் சாதாரணமான சாக்குபோக்குகளையும் அகற்றிவிட்டு, ஒவ்வொரு ஏழையையும் ஒவ்வொரு விதமான வறுமையையும் சந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்த்துக்கொள்வோம் என்றும் அக்குறுஞ்செய்தியில் உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2023, 15:18