2024 ஆம் ஆண்டு திருத்தந்தை வெரோனா செல்ல உள்ளார்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பேச்சுவார்த்தை கலந்துரையாடல் போன்றவற்றிற்கு ஏற்ற இடமும் ஆண் பெண் மறைப்பணியாளர்களைக் கொண்டதுமான இத்தாலியின் வெரோனா தலத்திருஅவை அழைப்பை ஏற்று 2024 ஆம் ஆண்டு மே மாதம் 18 சனிக்கிழமை வெரோனா செல்ல உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வெரோனா நகர் பாதுகாவலரான புனித Zeno இறந்த 1650ஆம் ஆண்டை 2024 ஆம் ஆண்டு மே 21 அன்று, நினைவுகூர்கின்றது வெரோனா. பல ஆண்டுகளாக, நீதி, அமைதி மற்றும் படைப்பிற்கான அக்கறை என்ற கருப்பொருளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பெண்கள், ஆண்கள், மக்கள் இயக்கங்கள், குழுக்கள் போன்றவற்றைக் கொண்ட வெரோனாவில் அமைதிக்கான கருத்தரங்குகள் பல அண்மைய நாட்களில் நடந்துள்ளன.
திருத்தந்தையின் வெரோனா முதல் நிகழ்வாக அரேனாவில் அமைதி, ஒருங்கிணைந்த சூழலியல், இடம்பெயர்வு, பணி, உரிமைகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றைப் பற்றி உரையாற்ற உள்ளார்.
மதிய உணவினை வெரோனாவில் உள்ள Montorio சிறைச்சாலையில் உள்ளவர்களுடன் இணைந்து உண்ண உள்ள திருத்தந்தை அவர்கள், இறுதியாக பெந்தெகோஸ்து அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்ற உள்ளார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்