வடஇந்திய மறைமாவட்டங்களுக்கு புதிய ஆயர்கள் நியமனம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
வட இந்தியாவின் அவுரங்காபாத், ராஞ்சி, நாசிக் மற்றும் ஜாபுவா மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 30 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி, வட இந்தியாவின் ராஞ்சி பெருநகர உயர்மறைமாவட்டத்திற்கு பேராயராக, ஆயர் Vincent Aind அவர்களையும், நாசிக் மறைமாவட்டத்திற்கு ஆயர் Barthol Barretto அவர்களையும் Jhabua மறைமாவட்டத்திற்கு அருள்பணியாளர் Peter Rumal Kharadi அவர்களையும் அவுரங்காபாத் மறைமாவட்டத்திற்கு இணை ஆயராக அருள்பணியாளர் Bernard Lancy Pinto அவர்களையும், நியமனம் செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜாபுவா மறைமாவட்ட ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு Peter Rumal Kharadi அவர்கள், 1959ஆம் ஆண்டு அஜ்மீர் மறைமாவட்டத்தின் கல்தேலா ஊரில் ஏப்ரல் 10 அன்று பிறந்தார். மஸ்காமோதி உதைப்பூர் பகுதிகளில் உதவிப்பங்குத்தந்தையாகவும் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியவர். முதன்மை அருள்பணியாளர், ஆலோசகர், ஆயர் நிர்வாகி என பல பொறுப்புக்களை திறம்பட ஆற்றியவர்.
நாசிக் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Barthol Barretto அவர்கள், 1961ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். 1989 ஆம் ஆண்டு மும்பை உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டவர்.
ராஞ்சி பெருநகர உயர்மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Vincent Aind அவர்கள், 1955ஆம் ஆண்டு ஜல்பைகுரி மறைமாவட்டத்தில் உள்ள கல்சினி என்னும் ஊரில் பிறந்தவர். 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் நாள் Bagdogra மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டவர்.
அவுரங்காபாத் மறைமாவட்டத்தின் இணைஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி Bernard Lancy Pinto அவர்கள், மும்பையின் விக்ரோலியில் பிறந்தவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்