கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி  

கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் பணி ஓய்வு

சீரோமலபார் வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவர் பொறுப்பிலிருந்து கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள் ஓய்வுபெறுவதை திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சீரோமலபார் வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவரும், எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயருமான, கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் பணி ஓய்வு பெற்றதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 7, இவ்வியாழனன்று ஏற்றுக்கொண்டார்.

சீரோமலபார் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் அடுத்த புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை அவ்வுயர் மறைமாவட்டத் தலைமையகத்தின் நிர்வாக ஆயர் செபஸ்தியான் வணியபுரக்கல் அவர்கள் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எர்ணாகுளம்-அங்கமாலி சீரோமலபார் உயர்மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகச் செயல்பட்டுவந்த பேராயர் ஆண்ட்ருஸ் தழத் அவர்கள் அப்போஸ்தலிக்க நிர்வாகி என்ற பொறுப்பிலிருந்து விலகும் அவரின் விருப்பத்தை திருத்தந்தை ஏற்றுக்கொண்டு அவ்விடத்தில் ஆயர் போஸ்கோ புதூர் அவர்களை நியமித்துள்ளார்.

திருந்தந்தையின் குறுஞ்செய்தி

டிசம்பர் 7, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் இறைவேண்டல் என்பது, நம்மை அன்புடன் நோக்கும் கடவுளுக்கு முன்பாக நம்மை நிலைநிறுத்துகிறது என்றும், இவ்வாறு கடவுள் நம்மை உற்றுநோக்கும் அந்தப் பார்வையின் ஒளியினில் உலகைக் குறித்துச் சிந்திக்க நமக்கு இரக்கம் நிறைந்த கண்களை அளிக்கின்றது என்றும் கூறியுள்ளார் திருந்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2023, 14:14