இந்தியாவின் 4 மறைமாவட்டங்களுக்கு புதிய ஆயர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இந்தியாவின் 4 மறைமாவட்டங்களுக்கு புதிய ஆயர்களை நவம்பர் 30ஆம் தேதி வியாழனன்று நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியாவின் கேரள மாநிலத்தின் கோட்டப்புறம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அதே மறைமாவட்டத்தைச் சேர்ந்தவரும், அம்மறைமாவட்ட புனித அந்தோனியார் திருத்தலத்தின் அதிபருமாகிய அருள்பணி அம்புறோஸ் புத்தன்வீட்டில் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1967ஆம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் அம்புறோஸ் புத்தன்வீட்டில் அவர்கள், உரோம் நகர் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
மஹராஷ்டிராவின் அம்ராவதி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பூனா மறைமாவட்டத்தின் அருள்பணி Malcolm Sequeira அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மறைமாவட்ட புதிய ஆயராக அதே மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி லீனஸ் பிங்கல் எக்கா அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.
இதே ஜார்க்கண்ட் மாநிலத்தின் டால்ட்டன்கஞ் மறைமாவட்ட ஆயராக, அதே மாநிலத்தின் ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக இருந்த ஆயர் தியோதோர் மஸ்கிரினாஸ் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்