திருவருகைக் காலத்தில் பிறரன்புச் செயல்பாடுகளின் அவசியம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அனைத்திற்கும் மேலானவராக இருக்கும் இறைத்தந்தை நம் மீது அக்கறையுடையவராக இருக்கிறார் என்பதை எடுத்துரைக்கவே இயேசு கிறிஸ்து வரலாற்றில் நுழைந்தார் என தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருவருகைக் காலத்தில் பிறரன்புச் செயல்பாடுகளின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைத்தந்தையைப்போல் நாமும் நம் அயலார் மீது, குறிப்பாக, உதவி தேவைப்படும் மக்கள் மீது அக்கறையுடன் செயல்பட வேண்டும் என டிசம்பர் 15ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.
அனைத்திற்கும் மேலான இறைத்தந்தை நம் மீது அக்கறை கொண்டுச் செயல்படுகிறார் என்பதை நமக்கு எடுத்துரைக்கவும், கடவுளின் பக்கம் நாம் இருப்பது என்பது, மற்றவர் மீது, குறிப்பாக ஏழைகள் மீது அக்கறைக் கொண்டிருப்பதை குறிப்பதாகும் என்பதை நமக்கு நினைவூட்டவும் இயேசு வரலாற்றில் நுழைந்தார் என உரைக்கிறது திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்