இந்திய குடில் ஒன்று இந்திய குடில் ஒன்று  (AFP or licensors)

மெய்யான ஏழ்மையை எடுத்துக்காட்டும் இயேசு பிறப்பின் காட்சி

கிறிஸ்து பிறப்பு காட்சி தரும் போலியில்லாத ஏழ்மை, கிறிஸ்மஸின் உண்மையான செழுமைக் குறித்துக் கண்டுகொள்ள உதவுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

போலியேயில்லாத, மெய்யான ஏழ்மையை எடுத்துக்காட்டும் இயேசு பிறப்பின் காட்சி, நாம் கிறிஸ்மஸின் உண்மையான செழுமையை மீண்டும் கண்டுகொள்ள நமக்கு உதவுகிறது என தன் டுவிட்டர் குறுஞ்செய்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்மஸ் பெருவிழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், பாலன் இயேசு பிறந்ததை விவரிக்கும் குடில் குறித்தும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் குறித்தும் தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்பு காட்சி தரும் போலியில்லாத ஏழ்மை, கிறிஸ்மஸின் உண்மையான செழுமைக் குறித்துக் கண்டுகொள்ளவும், கிறிஸ்மஸ் இயல்பு காட்சியை களங்கப்படுத்தும் பல கூறுகளிலிருந்து நம்மை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது என்றும், நம் ஒவ்வொருவரின் அருகாமையில் இருப்பதற்காக மனிதனாக உருவெடுத்த இறைமகனின் பிறப்பு குறித்து அது எடுத்துரைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2023, 16:04