ரோஹிங்கியா பகுதி புலம்பெயர்ந்தோர் தற்காலிக தங்குமிடங்களில் ரோஹிங்கியா பகுதி புலம்பெயர்ந்தோர் தற்காலிக தங்குமிடங்களில்   (ANSA)

புலம்பெயர்ந்தோர்க்கான பன்னாட்டு நாள்

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தையும் அதனைத் தொடர்ந்து மெக்சிகோ மற்றும் இரஷ்யாவும் உள்ளன.

மெரினா ராஜ் – வத்திக்கான்    

நமது நாகரீகம் ஆபத்தில் இருக்கும் காலத்தினை அடையாளப்படுத்துவதே புலம்பெயர்தல் என்றும், கிறிஸ்துமீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையும் ஆபத்தில் உள்ளது என்றும் தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 18 திங்கள் கிழமை சிறப்பிக்கப்படும் புலம்பெயர்ந்தோர்க்கான பன்னாட்டு நாளின் போது ஹேஸ்டாக் புலம்பெயர்ந்தோர் என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்தேயு நற்செய்தி ( 25;35) இறைவார்த்தையின் வழியாக நான் அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள் என்று கூறும் இயேசுவின்மீது நாம் கொண்ட நம்பிக்கையும் ஆபத்தில்  உள்ளது என்றுக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள்,  கடவுள் நம்மீது கொண்டிருக்கும் அன்பைப் போல, நெருக்கம், மென்மை, இரக்கம் ஆகியவற்றால் ஆன அன்பு நமக்கு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்குமான ஒரு சிறந்த நாளுக்காக இன்றே செயல்படுங்கள்: புலம்பெயர்ந்தோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள் என்ற கருப்பொருளில் புலம்பெயர்ந்தோர் பன்னாட்டு நாள் கொண்டாடப்படுகின்றது.

அமெரிக்கா அதிக அளவு புலம்பெயர்ந்தோரைக் கொண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அமெரிக்காவில் வாழும் மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் புலம்பெயர்ந்தோர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஜெர்மனி மற்றும் சவுதி அரேபியா இப்பட்டியலில் அடுத்த இடத்தைப் பெறுகின்றன.

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தையும் அதனைத் தொடர்ந்து மெக்சிகோ மற்றும் இரஷ்யாவும் இடம்பெற்றுள்ளன.  

இடம்பெயர்வு புலம்பெயர்வு என்பது எப்போதும் மனித வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக தனிநபர்கள் மற்றும் குழுக்கள் இடம்பெயர்கின்றனர். சிறந்த வாய்ப்புகளைத் தேடியும், வாழ்வாதரத்தை நாடியும், மோதல்கள், வன்முறை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கவும் பலர் தங்களது சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2023, 13:21