2019ஆம் ஆண்டு தவக்கால தியானத்தின்போது திருத்தந்தை 2019ஆம் ஆண்டு தவக்கால தியானத்தின்போது திருத்தந்தை  (ANSA)

தவக்காலத்தின் முதல் வாரத்தில் திருப்பீட அதிகாரிகளுக்கு தியானம்

பிப்ரவரி 18 முதல் 23 வரை, புதன் பொது மறைக்கல்வியுரை உட்பட திருத்தந்தையின் அனைத்து பொது சந்திப்புகளும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் தவக்கால தியானம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 18 முதல் 23 வரை ஒரு வாரத்திற்கு, தவக்காலத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் எனவும், அதில் திருப்பீட தலைமை உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 14ஆம் தேதி திருநீற்றுப் புதனுடன் துவங்கும் தவக்காலத்தில் பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிறு முதல் 23ஆம் தேதி வெள்ளிமாலை வரை இடம்பெற உள்ளதாக திருத்தந்தை அறிவித்துள்ள இந்த தவக்கால ஆண்டு தியானத்தில் உரோம் நகரிலுள்ள கர்தினால்கள், வத்திக்கானின் திருப்பீடத் துறைகளின் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

பிப்ரவரி 18 முதல் 23 வரை திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரை உட்பட அவரின் அனைத்து பொது சந்திப்புகளும் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2024, 15:19