கிறிஸ்தவ ஒன்றிப்பு பயணம் பன்முகத்தன்மையை மதிக்கிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய நம் பயணம் பன்முகத்தன்மையை எப்போதும் மதிக்கிறது என ஜனவரி 23, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி மாதம் 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் தற்போது திருஅவையில் இடம்பெறுவது குறித்து தன் கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திருத்தந்தை, பன்முகத்தன்மையை மதிக்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய நம் பயணம் பன்முகத்தன்மையை மதிக்கிறது என்றும், ஒத்திசைவில் நம்மை தூய ஆவியார் சிறைப்படுத்துவதில்லை, மாறாக, நாம் ஒருவரையொருவர் நமக்குள்ளிருக்கும் வேறுபாடுகளுடன் அரவணைத்துக் கொள்ள நம்மைத் தயாரிக்கிறார் என்றும் தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மாதம் 18ஆம் தேதி முதல் திருத்தூதர் பவுலின் மனமாற்றத் திருவிழாவான ஜனவரி 25ஆம் தேதிவரை இடம்பெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இறுதி நாளான இவ்வார வியாழனன்று, பிற கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து உரோம் நகர் புனித பவுல் பெருங்கோவில் மாலை வழிபாட்டில் கலந்துகொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்