2006 மார்ச்சில் திருத்தந்தை பெனடிக்ட் வத்திக்கான் வானொலிக்கு வந்தபோது 2006 மார்ச்சில் திருத்தந்தை பெனடிக்ட் வத்திக்கான் வானொலிக்கு வந்தபோது 

ஒலி-ஒளி வடிவில் பாரம்பரிய நினைவுகளை பாதுகாத்துவரும் திருப்பீடம்

2025ஆம் ஆண்டு ஜூபிலிக்காக நம்மைத் தயாரித்துவரும் இவ்வேளையில், கடந்த கால நிகழ்வுகளை உயிருடன் கொண்டுவர ஒலி-ஒளிப் பேழைகள் நிச்சயமாக உதவும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவையின் நிகழ்வுகளை நினைவில் வைத்திருக்க உதவும் ஒலி-ஒளிப் பேழைகளை பாதுகாக்கும் அறிவியல் அமைப்பின் அங்கத்தினர்களை வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் வரலாற்று நிகழ்வுகளை ஒலி-ஒளி வடிவில் பாதுகாத்து வருவதற்கென உருவாக்கப்பட்ட அறிவியல் அமைப்பின் அங்கத்தினர்களுக்கு என தயாரிக்கப்பட்ட உரையை எழுத்துவடிவில் அவர்களிடம் வழங்கிய திருத்தந்தை, ஒலி-ஒளி பாரம்பரிய நினைவுகளை பாதுகாத்துவரும் இக்குழுவைப் பாராட்டியதோடு, இத்தகையப் பணிகள் வழி, திருஅவைக் கோட்பாட்டு நிகழ்வுகளும், கலாச்சார தலையீடுகளும் வருங்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள், ஆய்வு மையங்கள் தொழில்நுட்பத்துறையினர் இங்கு இணந்து பணியாற்றுவது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது எனவும் தான் வழங்கிய செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளின்  வரலாறு, இதன் வழி, நேரடியாகக் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பாதுகாக்கப்பட்டுவருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று நினைவுகளை உள்ளடக்கிய ஒலி-ஒளிப் பேழைகளை பாதுகாக்க விளைவதில் பல நிறுவனங்கள் பொருளாதாரச் சுமைகளை எதிர்நோக்குகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இதனால் ஏற்படும் பொருளாதர இழப்பு, இந்த நினைவுப் பேழைகளால் கிடைக்கவிருக்கும் நன்மைகளின் மதிப்பைவிட மிகச் சிறியதே எனவும் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு ஜூபிலிக்காக நம்மைத் தயாரித்துவரும் இவ்வேளையில், கடந்த கால நிகழ்வுகளை உயிருடன் கொண்டுவர உதவும் இந்த வரலாற்று நினைவுகளின் சேமிப்பின் முக்கியத்தும் குறித்து தான் வழங்கிய எழுத்துப் பிரதியில் மேலும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2024, 15:30