திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்!

நல்வாழ்வு என்பது நாம் கொண்டுள்ள செல்வத்தைப் பொருத்ததல்ல, மாறாக, நாம் கொண்டுள்ள உறவுகளைப் பொறுத்தே அமைகின்றது : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நல்வாழ்வு வாழ்வதற்குப் பொருள்களைச் சேர்ப்பது மட்டும் போதாது, ஏனென்றால்  நல்வாழ்க்கை என்பது நம்மிடம் இருப்பதைப் பொறுத்தது அல்ல, மாறாக, அது நாம் கொண்டுள்ள உறவுகளைப் பொறுத்தது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 24, இப்புதனன்று தான் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுடன், மற்றவர்களுடன், மேலும் குறைவாக பொருள்  உள்ளவர்களுடன் நாம் கொண்டுள்ள அணுகுமுறையைப் பொறுத்தே நல்வாழ்வு என்பது அர்த்தம் பெறுகிறது என்றும் கூறியுள்ளார்.

லூக்கா நற்செய்தியில் 'அறிவற்ற செல்வன்'  என்ற தலைப்பில் வரும் உவமையில், “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (காண்க லூக் 12:15) என்று நமதாண்டவர் இயேசு கூறும் இறைவார்த்தைகளின் அடிப்படையில் இன்றைய நாள் டுவிட்டர் குறுஞ்செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2024, 15:13