கடவுளின் வார்த்தை நம் ஒவ்வொருவரையும் இலக்காகக் கொண்ட பரிசு
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுளின் வார்த்தை என்பது நம் ஒவ்வொருவரையும் இலக்காகக் கொண்ட ஒரு பரிசு என்றும், அதன் செயல்பாடுகளை ஒருபோதும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 15 திங்கள்கிழமை ஹேஸ்டாக் கடவுளின் வார்த்தை என்ற தலைப்பில் தனது கருத்துக்களை இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியானவரின் துணையுடன் தன்னிச்சையாக, இறைவார்த்தைகள் நமக்குள் துளிர்விடுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நம் ஒவ்வொருவரையும் இலக்காகக் கொண்ட பரிசு கடவுளின் வார்த்தை என்றும், நாம் அறியாத மற்றும் எதிர்பாராத நேரத்தில் நமது கணக்கீடுகளுக்கு அப்பால், தூய ஆவியின் செயல்பாட்டினால் நம்மில் முளைத்து வளர்கின்றது, அதன் செயல்பாட்டை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.
இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தந்தி
கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களோடு தான் உடன்இருப்பதாகவும், மரணம், துன்பம் போன்றவற்றை அனுபவிக்கும் மக்களோடு, தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், இரங்கல் தந்திச்செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 15 திங்கள்கிழமை QUIBDÓ மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி பேரருள்திரு MARIO DE JESÚS ÁLVAREZ GÓMEZ அவர்களுக்கு திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிட்டு திருத்தந்தையின் இரங்கல் தந்திச்செய்தியானது அனுப்பப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்