கர்தினால் José Tolentino de Mendonça கர்தினால் José Tolentino de Mendonça  

தேசிய நற்கருணை மாநாட்டில் பங்கேற்க உள்ளார் கர்தினால் Tolentino

2024ஆம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 2 வரை போர்த்துக்கலில் உள்ள Braga வில் ஐந்தாவது தேசிய நற்கருணை மாநாடானது நடைபெற உள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

போர்த்துக்கல்லில் நடைபெற இருக்கும் ஐந்தாவது தேசிய நற்கருணை மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதியாக பங்கேற்க கர்தினால் José Tolentino de Mendonça அவர்களையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கைக்கான மதிப்பீட்டாளராக பேரருள்திரு Daniele Libanori அவர்களையும் நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 6 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி உரோம் மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இயேசு சபை அருள்பணியாளரான பேரருள்திரு Daniele Libanori அவர்களை அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கைக்கான மதிப்பீட்டாளராக  நியமித்துள்ள திருத்தந்தை அவர்கள், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான திருப்பீடத்துறையின் தலைவரான கர்தினால் José Tolentino de Mendonça அவர்களை நற்கருணை மாநட்டில் தனது பிரதிநிதியாகப் பங்கேற்கத் தேர்ந்தெடுத்துள்ளார்.

2024ஆம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 2 வரை போர்த்துக்கலில் உள்ள Braga வில் ஐந்தாவது தேசிய நற்கருணை மாநாடானது நடைபெற உள்ளது.

Apostolic Penitentiary பேராயத்தின் தலைவராக கர்தினால் மௌரோ பியாசென்சா (Mauro Piacenza) அவர்கள் இதுவரை பணியாற்றி வந்த நிலையில் உரோம் மறைமாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் திருத்தந்தையின் பிரதிநிதியாக பணியாற்றும் கர்தினால் Angelo De Donatis அவர்களை Apostolic Penitentiary எனப்படும் திருஅவையின் மனசாட்சி பேராயத்தின் தலைவராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2024, 15:12