புனித கதவில் திருத்தந்தை புனித கதவில் திருத்தந்தை  (ANSA)

ஜூபிலி ஆண்டை நோக்கி நம்பிக்கையின் திருப்பயணிகளாக.....

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி : இறையன்பில் ஒரே குடும்பமாக ஒன்றிப்பில் நாம் வாழவேண்டும் என்ற கிறிஸ்துவின் கனவிற்கு சான்றாக விளங்குவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித ஆண்டை நோக்கி, அதாவது ஜூபிலி ஆண்டை நோக்கி நம்பிக்கையின் திருப்பயணிகளாக நாம் பயணிப்போம் என அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2025ஆம் ஜூபிலி ஆண்டிற்கான முன்னோடியாக இவ்வாண்டை இறைவேண்டல் ஆண்டாக அறிவித்து ஜூபிலி ஆண்டிற்கான தயாரிப்புக்கள் இடம்பெறும் இவ்வேளையில், அவ்வாண்டை நோக்கி நம்பிக்கையின் திருப்பயணியாக முன்னோக்கிச் செல்வோம் என ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமையின் டுவிட்டர் செய்தியில் அழைப்புவிடுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் கனவுகளுக்கு சாட்சிகளாக விளங்குவோம் எனவும் கேட்டுள்ளார்.

இந்த புனித ஆண்டை நோக்கிய நம் நம்பிக்கையின் திருப்பயணத்தில் நமக்குரிய அழைப்பை கண்டுகொண்டு, தூய ஆவியாரின் பல்வேறு அருட்கொடைகளைப் பகிர்வதுடன், இறையன்பில் ஒரே குடும்பமாக ஒன்றிப்பில் நாம் வாழவேண்டும் என்ற கிறிஸ்துவின் கனவிற்கு சான்றாக விளங்குவோம் என தன் டுவிட்டர் செய்தியில் மேலும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2024, 15:31