ஆவியாரில் உரையாடுவதற்கு ஒரு குறிப்பிட்ட உள் மனப்பான்மை தேவை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நாம் தூய ஆவியானவருக்கு செவிசாய்த்து சகோதரிகளாகவும் சகோதரர்களாகவும் ஒன்றாக நடக்க விரும்புகிறோம் ஏனென்றால் அவர்தான் உலக ஆயர் மாமன்றத்தின் உண்மையான கதாநாயகர் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்ரல் 29, இத்திங்களன்று, இயேசு சபை அருள்பணியாளர்கள் Juan Antonio Guerrero Alves மற்றும் Óscar Martín López இருவரும் இணைந்து எழுதியுள்ள "ஆவியில் உரையாடல்- தேர்ந்துதெளிதலின் கலை மற்றும் ஒருங்கிணைந்து பயணித்தலின் பயிற்சி" (Conversation in the Spirit - The Art of Discernment and the Practice of Synodality) என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலிற்கு வழங்கியுள்ள அணிந்துரையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
ஆவியின் உரையாடலில், ஒன்றிப்பு மற்றும் பணியைப் புதுப்பித்தலை நோக்கமாகக் கொண்ட ஒரு பங்கேற்பு வழியைக் காண்கிறோம் என்றும், இது அனைவரின் பங்கேற்பை ஊக்குவிக்கிறது மற்றும் ஒன்றிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பயணத்தில் நாம் அனைவரும் இருக்கும் பெரிய பன்முகத்தன்மையை வரவேற்கிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
ஆவியில் உரையாடல், தேர்ந்துதெளிதல் மற்றும் ஒருங்கிணைந்த பயணம் யாவும், எல்லாவற்றிற்கும் மேலாக, செவிசாய்ப்பதில் அடங்கியுள்ளது என்றும், திருஅவை மேற்கொண்ட ஒருங்கிணைந்த பயணம் என்பது ஆழமான செவிசாய்க்கும் பாதை என்றும் தனது அணிந்துரையில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
ஆவியில் உரையாடுவதற்கு ஒரு குறிப்பிட்ட உள் மனப்பான்மை தேவை என்றும், ஆவியில் உரையாடல், தேர்ந்துதெளிதல் மற்றும் ஒருங்கிணைந்த பயணம் யாவும் ஆவியானவரால் நிரப்பப்படுவதற்காக நம்மை நாமே வெறுமையாக்க முயற்சித்தால் மட்டுமே நிகழும் என்றும், அதுவும், பணிவு, விருந்தோம்பல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை, நமக்குள் திறம்பட வளர்த்துக் கொண்டால், மட்டுமே இது சாத்தியம் என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, இந்த வழியில் மட்டுமே நமது ஒன்றிப்பையும், பணியையும் பலப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்