வத்திக்கான் நீதித்துறை அலுவலகங்கள் வத்திக்கான் நீதித்துறை அலுவலகங்கள் 

வத்திக்கான் நீதித்துறையில் திருத்தந்தையின் சில மாற்றங்கள்

நீதித்துறையில் சில மாற்றங்களைப் புகுத்தியுள்ள திருத்தந்தை, சாதாரண குற்றவியல் நீதிபதிகள் ஓய்வெடுக்கும் வயதை 75 எனவும், உயர்நிலை நீதிபதிகளின் ஓய்வு வயதை 80 எனவும் திருத்தியுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வத்திக்கான் நீதித்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி Motu Proprio என்னும் தன் சுயவிருப்பத்தின் பேரில் வெளியிடும் அப்போஸ்தலிக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நீதித்துறையின் விதிமுறைகளில் சில மாற்றங்களைப் புகுத்தியுள்ள திருத்தந்தை, சாதாரண குற்றவியல் நீதிபதிகள் ஓய்வெடுக்கும் வயதை 75 எனவும், உயர்நிலை நீதிபதிகளின் ஓய்வு வயதை 80 எனவும் திருத்தியுள்ளார். அதனோடு, தேவைப்பட்டால் சிலரின் பணியை இந்த வரம்புகளைத் தாண்டியும் நீட்டிப்பதற்கு திருத்தந்தைக்கு இருக்கும் உரிமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக பெறப்பட்டுள்ள அனுபவத்தின் உதவிகொண்டு நீதித்துறையில் மாற்றங்களைப் புகுத்துவதாக தன் அறிவிப்பில் கூறும் திருத்தந்தை, நீதித்துறையின் பணிகள் பொறுத்தவரையில் இந்த மாற்றங்கள் கொணரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  

நீதிபதியின் நிலையான கொள்கை மற்றும் வழக்குகளின் நியாயமான காலத்தை உறுதி செய்வதற்கு இயைந்தவகையில், ஓய்வுபெறும் நீதித்துறைத் தலைவருக்கு ஒரு துணைத்தலைவரை நியமித்து, தலைவர் பணி ஓய்வுப் பெறும்போது துணைத்தலைவரே தலைவராகத் தொடரவும் இப்புதிய விதிமுறையில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது

தங்கள் பணிகளைச் சரியாக ஆற்றமுடியா நிலையில் இருக்கும் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யவும், சிலவேளைகளில் தற்காலிகமாகக்கூட பதவி நீக்கம் செய்யவும் திருத்தந்தைக்கு இருக்கும் அதிகாரம் இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஊதியம், ஓய்வூதியம் பற்றியும் இந்த புதிய விதிமுறை எடுத்துரைத்துள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2024, 15:19