குழந்தைகளுடன் திருத்தந்தை குழந்தைகளுடன் திருத்தந்தை  (ANSA)

"குழந்தைகள்: வருங்கலத் தலைமுறை" என்ற தலைப்பில் கூட்டம்

போரின் கோர நிகழ்வுகளால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை வாரி அரவணைத்து அவர்களுக்காக ஏதாவது செய்வோம் என்பது குறித்து விவாதங்கள் தேவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அனைவரும் உடன்பிறந்தோர் என்ற அமைப்பால் சனிக்கிழமை மாலை குழந்தைகள் மீதான அக்கறைக் குறித்து ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள வட்டமேசை மாநாட்டில் திருத்தந்தையும் கலந்துகொள்ள உள்ளார்.  

"குழந்தைகள்: வருங்கலத் தலைமுறை" என்ற தலைப்பில் வத்திக்கானின் உலக ஆயர் மாமன்றத்திற்கான புதிய அரங்கில் இடம்பெற உள்ள இந்த வட்டமேசை மாநாட்டில், போர்கள் குழந்தைகளைப் பாதிக்கின்றன, போரால் இறந்துவரும் குழந்தைகளையும், அனைத்தையும் இழந்து போரின் கோர நிகழ்வுகளால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளையும் வாரி அரவணைத்து அவர்களுக்காக ஏதாவது செய்வோம் என்பது குறித்து விவாதங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனியன்று மாலை இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் 11 மேசைகளில் அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்துறையினர், நிறுவனர்கள், விளையாட்டுத்துறையினர் என பலர் இதில் கலந்துகொண்டு மனித குலத்தின் உடன்பிறந்த உறவுநிலையின் பின்னணியில் பல்வேறு அணுகுமுறைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

மனித உடன்பிறந்த உறவுநிலை குறித்த இந்த இரண்டாவது கூட்டம் சனிக்கிழமை மாலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் இடம்பெறும் இசைக்கச்சேரியுடன் உள்ளுர் நேரம் இரவு 9.30 மணிக்கு நிறைவுக்கு வரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2024, 16:56