ஏழைகளின் மறைசாட்சி, அருள்பணி Múgicaன் 50ஆம் ஆண்டு நினைவு
அர்ஜெண்டீனா நாட்டில் ஏழைகளின் மறைசாட்சி என அழைக்கப்படும் அருள்பணி Carlos Múgica அவர்கள் கொல்லப்பட்டதன் 50ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து அந்நாட்டிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜெண்டினா தலைநகர் புவனோஸ் ஐரஸ் நகரிலுள்ள வில்லா லூரோ மாவட்டத்தின் சான் பிரான்சிஸ்கோ சொலானோ பங்குதளத்தில் 1974ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி மாலை திருப்பலி நிறைவேற்றியபின் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் அருள்பணி Múgica.
அருள்பணி Múgica கொல்லப்பட்டதன் 50ஆம் ஆண்டு நினைவையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புவனோஸ் ஐரஸ் பெருமறைமாவட்டத்திற்கு அனுப்பிய செய்தி, அருள்பணி Múgica அவர்களின் மரணத்தின் 50 ஆண்டு நினைவாக ஒருவாரமாக சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகளின் இறுதி நாளான மே 12ஆம் தேதியன்று புவனோஸ் ஐரஸ் பேராயர் Jorge Ignacio García Cuerva அவர்களால் விசுவாசிகளுக்கு வாசித்தளிக்கப்பட்டது.
ஏழைகளுக்காக உழைப்பவர்களுடன் நம் உடன்பிறந்த உணர்வு நிலையை புதுப்பிப்பதற்கான நல்லதொரு வாய்ப்பு இது என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு வகைகளில் ஏழ்மை நிலையை அனுபவிக்கும் மக்களுடன் நாம் இதயத்தாலும் உடலாலும் நெருங்கியிருக்க வேண்டும் என்பதை இந்த மறைசாட்சிகளின் கொண்டாட்டங்கள் உதவுகின்றன என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்