இந்தியாவில் இரு புதிய ஆயர்கள் நியமனம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இந்தியாவின் ஜான்சி மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராக லக்னோ மறைமாவட்ட அருள்பணி வில்பிரட் கிரகரி மொராஸ் அவர்களையும், வேராபொளி பெருமறைமாவட்டத்தின் துணை ஆயராக அதே பெருமறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி Antony Valumkal அவர்களையும், மே 11ஆம் தேதி சனிக்கிழமையன்று நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜான்சி மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராக நியமிக்கப்பட்டிருக்கும் அருள்பணி மொராஸ் அவர்கள், மங்களூர் மறைமாவட்டத்தில் 1969ஆம் ஆண்டு பிறந்து லக்னோ மறைமாவட்டத்தில் 1997ஆம் ஆண்டு அருள்பணியாளராகி 2013 முதல் 2016 வரை உரோம் நகரின் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
2021ஆம் ஆண்டு முதல் அலகாபாத் புனித யோசேப்பு குருமடத்தின் அதிபராகச் செயலாற்றிவரும் அருள்பணி மொராசை ஜான்சி மறைமாவட்ட வாரிசுரிமை ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கேரளாவின் வேராப்பொளி பெருமறைமாவட்ட துணை ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள அதே மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி ஆண்டனி வலும்கல் அவர்கள், இதுவரை கொச்சியிலுள்ள வல்லார்படோம் அன்னை மரியா தேசிய திருத்தல பசிலிக்காவில் அதிபராகவும் பங்குகுருவாகவும் பணியாற்றி வந்துள்ளார்.
1969ஆம் ஆண்டு வேராப்பொளி பெருமறைமாவட்டத்தில் பிறந்த புதிய துணை ஆயர் வலும்கல் அவர்கள், 1994ஆம் ஆண்டு அதே பெருமறைமாவட்ட அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்