இயேசுவின் பிரசன்னத்தால் மாணவர் வாழ்வை ஒளிரச் செய்யுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இயேசுவின் பிரசன்னத்தால் உங்கள் மாணவர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யுங்கள். இந்த செயலானது நண்பர்கள், கடவுள் மற்றும் மனிதர்களின் மாண்பைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தவும், அவர்கள் இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அதன் உண்மையான சாரத்திலிருந்து அகற்றவும் வழிகாட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவிலுள்ள அருளாளர் Ramón Llull பல்கலைக் கழகத்தின் Blanquerna பிறரன்பு அமைப்பின் உறுப்பினர்கள் 22 பேரை திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
Blanquerna என்ற பெயர், அருளாளர் இரமோன் லுல் தனது காலத்தின் சமூகத்தை துல்லியமாக விளக்குவதற்குப் பபயன்படுத்திய புகழ்பெற்ற இலக்கிய பாத்திரம் என்றும் இது வெகுவாகத் தனது கவனத்தை ஈர்த்தது என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அதேவேளையில் தத்துவயியல் பேராசிரியாரான அவர், கிறிஸ்துவின் வாழ்க்கையின் சில மாதிரிகளை கற்பித்தல் வடிவத்தில் கொடுக்க முயற்சிக்கிறார் என்றும், அது கிறிஸ்துவைப் பின்பற்றும் எந்த நபரையும் அவர் எங்கு அழைக்கப்பட்டாலும் அவருக்குப் பணியாற்ற முடியும் என்றும் விளக்கியுள்ளார்.
சாத்தியமற்ற இலட்சியங்களின் மாயையான நகல்களால் அல்ல, மாறாக,.தற்போதைய, நவீன, விரைவூக்கமுடன், கற்பித்தல் மொழியுடன் மற்றும் எதார்த்தத்தின் துல்லியமான பகுப்பாய்வுடன் நாம் முழுமையான ஆண்களையும் பெண்களையும் உருவாக்குகிறோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
கடவுளின் பணிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முழுமைபெற்றபணியாளர்கள் என்பவர்கள், தாங்கள் எப்போதும் திருப்பயணிகள் என்பதையும், எல்லாமே இலட்சியத்தை நோக்கிய ஒரே தேடல் என்பதையும் அறிந்தவர்களாக, முழு வலிமையுடன் அந்த இலட்சியத்தை நோக்கி முன்னோக்கிச் செல்வார்கள் என்றும் விளக்கினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்