இளையோர் மேய்ப்புபணி கருத்தரங்கில் கலந்துகொண்டோருடன் திருத்தந்தை இளையோர் மேய்ப்புபணி கருத்தரங்கில் கலந்துகொண்டோருடன் திருத்தந்தை  (Vatican Media)

இளையோர் தினக் கொண்டாட்டங்கள் இயேசுவை சந்திக்க உதவுபவை

திருத்தந்தை : தெளிந்து தேர்தல் என்பது ஒருவர் தனக்கும், மற்றவர்களுக்கும், இறைவனுக்கும் உண்மையுள்ளவர்களாக இருப்பதைக் குறிக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான திருப்பீடத் துறையால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இளையோர்  மறைப்பணி குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் பங்குபெற்றோரை மே 25, சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்வு மற்றும் நம்பகத்தன்மை குறித்து அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.  

தேர்ந்து தெளிதல் என்பது ஒருவர் தனக்கும், மற்றவர்களுக்கும், இறைவனுக்கும் உண்மையுள்ளவர்களாக இருப்பதைக் குறிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

2025ஆம் ஆண்டு ஜூலையில் இடம்பெற உள்ள யூபிலி ஆண்டு இளையோர் கொண்டாட்டங்கள், மற்றும் மூன்றாண்டுகளுக்குப்பின் தென் கொரியாவின் Seoul நகரில் இடம்பெற உள்ள உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் ஆகியவை குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய கொண்டாட்டங்கள் இயேசுவை சந்திப்பதற்கு உதவுபவை என எடுத்துரைத்தார்.

அனைத்து மறைப்பணியாளர்களும், அருள்பணியாளர்கள், துறவிகள், மறைக்கல்வி ஆசிரியர்கள் என அனைவருடன் இளையோரும் தேர்ந்து தெளிந்து செயல்படவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தேர்ந்து தெளிதல் என்பது உண்மையை நோக்கிய ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2024, 16:06