தொமினிகன் குடியரசுத் தலைவருடன் திருத்தந்தை சந்திப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மே 27, இத்திங்களன்று, தொமினிகன் குடியரசுத் தலைவர் திரு. Luis Rodolfo Abinader Corona அவர்கள் திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.
திருப்பீடத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்பு, இனிமையாகவும், இருதரப்பு உறவுகளையும் பாராட்டும்படியாகவும், அதனை மேலும் வலுப்படுத்தக்கூடியதாகவும் இருந்தது என்றும் உரைக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் செய்தி அறிக்கை.
இச்சந்திப்புக்குப்பின், தொமினிகன் குடியரசுத் தலைவர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார் என்றும் கூறியுள்ளது அச்செய்திக் குறிப்பு.
தொமினிகன் குடியரசுக்குத் தலத்திருஅவையின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு குறித்தும், குறிப்பாக, கல்வித் துறை, பிறரன்புப் பணிகள் துறை குறித்தும் கலந்துரையாடப்பட்டது என்றும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.
மேலும் இடம்பெயர்வு மற்றும் நாட்டின் தற்போதையச் சூழ்நிலை, தொமினிகன் மக்களின் பொது நலனை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை புதுப்பித்தல் குறித்த பல்வேறு தலைப்புகளின் கீழ் இந்தக் கலந்துரையாடல் தொடர்ந்தது என்றும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்