இறையியல் கற்பித்தல் என்பது திருஅவையின் பணி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பல்வேறு கலாச்சாரங்களுக்கிடையே மோதல்கள் இல்லாமல், உரையாடலில், ஒன்றிப்பை உறுதிசெய்வதற்கு, அதன் குறிப்பிட்ட அறிவாற்றல் பங்களிப்பை வழங்கி, அறிவியல் மற்றும் பிற விமர்சனத் துறைகளுக்கு ஒரு துணையாக இறையியல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 10, இவ்வியாழனன்று, கத்தோலிக்க இறையியலுக்கான சங்கங்களின் அனைத்துலக உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, நமது இறைநம்பிக்கைக்கான காரணத்தை கேட்பவர்களுக்கு அதனை விளக்குவது நமது கத்தோலிக்க நம்பிக்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், இறையியல் என்பது, உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் அவசியமான திருஅவையின் சேவையாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.
பல்வேறு மக்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரப் பின்னணிகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால், பெருகிய முறையில் பல இன மற்றும் சமூகங்களில் நாம் அனுபவிக்கும் சகாப்த மாற்றங்கள் காரணமாக இறையியல் முக்கியமானதாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இதன் அடிப்படையில், பாரம்பரியத்திற்கு ஆக்கபூர்வமான விசுவாசம், ஒரு குறுக்கு-ஒழுக்க அணுகுமுறை மற்றும் கூட்டுரிமை என இறையியலுக்கான மூன்று வழிகாட்டுதல்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டி விளக்கினார் திருத்தந்தை..
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்