பத்திரிகை சுதந்திரம் என்பது உண்மையை உரைப்பது!
ஒரு நல்ல விமர்சன உணர்வை வளர்க்கும் பத்திரிகை என்பது தவறான கருத்தியல்களைத் தவிர்த்து, நீதிக்காகவும், அமைதிக்காகவும், படைப்பை பாதுகாப்பதற்காகவும் உழைக்க நமக்கு உதவுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒரு நல்ல விமர்சன உணர்வை வளர்ப்பதற்கும் உண்மையைப் பொய்யிலிருந்து வேறுபடுத்தி அறிவதற்கும் பத்திரிக்கை சுதந்திரம் என்பது மிகவும் அவசியமான ஒன்று எனக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 3, இவ்வெள்ளியன்று, தான் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். பத்திரிகை சுதந்திரம் என்பது தவறான கருத்தியல்களைத் தவிர்த்து, நீதிக்காகவும், அமைதிக்காகவும், படைப்பை பாதுகாப்பதற்காகவும் உழைக்க நமக்கு உதவுகிறது என்றும் விளக்கியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
03 May 2024, 16:08