வெண்புறா வடிவில் தூய ஆவியார் வெண்புறா வடிவில் தூய ஆவியார் 

தூய ஆவியார் நம்மை வழிநடத்துகிறார், திடப்படுத்துகிறார்

நம் வாழ்க்கையில் நேரிடும் துன்பங்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும், இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கு தூய ஆவியார் நம்மை வழிநடத்துகிறார்

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

மே 24, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில், நம் வாழ்க்கையில் நேரிடும் துன்பங்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும், மகிழ்ச்சி மற்றும் துயரங்களுக்கு  மத்தியிலும்  இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கு தூய ஆவியார் நம்மை வழிநடத்துகிறார், அறிவூட்டுகிறார், நம்மை திடப்படுத்துகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும், ஏப்ரல் 27 அன்று காணாமல் போன தென் சூடானின் Tombura Yambio மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணியாளர் Luke Yugue மற்றும் அவருடைய ஓட்டுநர் Michael Gbeko இருவரும் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அம்மறைமாவட்டத்தின் ஆயர் Kussala.

கடந்த மாதம் 27ஆம் தேதியன்று நாகெரோ மாவட்டத்திலிருந்து டோம்புரா மாவட்டத்திற்கு செல்லும் வழியில் காணாமல் போன அவர்கள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய ஆயர் அவர்கள், மறைமாவட்ட மக்கள், அவர்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்ததுடன், அவர்களின் இழப்பு நமக்கு வலியை தந்தபோதிலும், நற்செய்தியின் கொள்கைகளையும், அவர்களின் நம்பிக்கையையும் உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும் என்றார்.

இவர்களின் இறுதிச்சடங்குகள் சனிக்கிழமை 25ஆம் தேதி இடம்பெறும் என்று தெரிவித்தார் மறைமாவட்ட ஆயர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2024, 16:04