வெறுப்புக்கு இல்லையென்போம் - திருத்தந்தையின் டுவிட்டர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
வெறுப்புப் பேச்சுக்களால் சமூகத்தின் நேர்த்தியான பின்னல் பாதிக்கப்படுவதுடன், மனித மாண்பும் பறிக்கப்படுகிறது என ஜூன் 18, செவ்வாய்க்கிழமையின் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘வெறுப்புக்கு இல்லையென்போம்’ என்ற ஹேஷ்டாக்குடன் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
உண்மைதன்மை சரிபார்க்கப்படாத தகவல்களைக் கொண்டு, சுவையற்ற, பொய்யான, அதேவேளை உண்மையென நம்பவைக்கும் பேச்சுக்களை மீண்டும் மீண்டும் கூறி, வெறுப்புப் பிரகடனங்களால் மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாவதன் வழியாக, மனித வரலாற்றின் நேர்த்தியான பின்னலை முன்னோக்கி நாம் எடுத்துச்செல்வதில்லை, என தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
வெறுப்புப் பேச்சுகளின்வழி மக்களின் மாண்பு பறிக்கப்படுகிறது என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதி, வெறுப்புக்கு இல்லை என்ற பதிலை வழங்குவோம் என விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்