அருள்பணியாளர்கள் Gjon Gazulli மற்றும் Luigi Palić, OFM அருள்பணியாளர்கள் Gjon Gazulli மற்றும் Luigi Palić, OFM  

அல்பேனிய அருள்பணியாளர்கள் இருவர் அருளாளர் நிலைக்கு உயர்வு!

இந்த அறுவரில் ஒருவர் மறைமாவட்ட அருள்பணியாளர், மூவர் பிரான்சிஸ்கன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணியாளர்கள், இருவர் அருள்சகோதரிகள், ஒருவர் பொதுநிலையினர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அல்பேனியாவைச் சேர்ந்த இரண்டு அருள்பணியாளர்களை அருளாளர் நிலைக்கும், ஒரு பொதுநிலையினர் உட்பட நால்வரின் வீரத்துவ பண்புகளை அங்கீகரிக்கும் நிலைக்கும் உயர்த்துவதற்கான ஆணையொன்றைப் பிறப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 20, இவ்வியாழனன்று, புனிதர்நிலை திருப்பீடத் துறைக்கு வழங்கியுள்ள ஆணையில் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை. இந்த அறுவரில் ஒருவர் மறைமாவட்ட அருள்பணியாளர், மூவர் பிரான்சிஸ்கன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணியாளர்கள், இருவர் அருள்சகோதரிகள், ஒருவர் பொதுநிலையினர்.

அருள்பணியாளர் Luigi Palić, OFM

அல்பேனிய நாட்டைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கன் சபையின் அருள்பணியாளர் Luigj Paliq அவர்கள், உள்ளூர் மக்களை துன்புறுத்தியதை எதிர்த்ததற்காகவும், மரபுவழிக்கு (orthodoxy) கட்டாய மதமாற்ற முயற்சிகளுக்காகவும் 1913-இல் Montenegrin படையினரால் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

அருள்பணியாளர் Gjon Gazulli

அருள்பணியாளர் Gjon Gazulli அவர்கள், பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1927- ஆம் ஆண்டு,  கொல்லப்பட்டார். மக்களிடையே கட்டாய மத ஒற்றுமைக்கான (forceable religious unity) அரசின் முயற்சிகளுக்கு அவரது செயல்பாடுகள் தடையாக இருந்ததால் அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இவரும் அல்பேனிய நாட்டைச் சேர்ந்தவர்.

அருள்பணியாளர் Isaia Columbro, OFM

அருள்பணியாளர் Isaia Columbro அவர்கள் 1908-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ‘விருந்தோம்பலின் துறவி’ என அழைக்கப்படுகிறார். இவர் ஆன்மிக மற்றும் பொருள் ஆறுதலைத் தேடுபவர்களுக்கு (seeking spiritual and material consolation) உதவியதன் வழியாகத் தன்னை வேறுபடுத்திக் கொண்டார். 1980-இல் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவர் இர்பினியா மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். 2004-இல் இறைபதம் அடைந்தார். இவரும்  ஃபிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்தவர்.

அருள்சகோதரி Maria Costanza Zauli

Maria Costanza Zauli 1886-இல் இத்தாலியின் Faenza-வில் பிறந்தார். 19 வயதில், இவர் Bologna-விலுள்ள திருஇதயப் பணிப்பெண்கள் சபையில் சேர்ந்தார். நோயுற்று பல ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருந்த இவர்​​ 1954-ஆம் ஆண்டில் இறைபதம் அடைந்தார்.

அருள்சகோதரி  Vincenza Guilarte Alonso

Vincenza Guilarte Alonso பர்கோஸின் இயேசுவின் புதல்வியர் மடத்தில் கல்வி கற்றார், இது குறிப்பாக இளைஞர்களின் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சபை. 1909 ஆம் ஆண்டில், 30 வயதில், பிரேசிலில் ஒரு குழுமத்தை நிறுவ ஐந்து சகோதரிகளுடன் அனுப்பப்பட்டார். அங்கு அவர் உள்ளூர் மக்களின் நலன்களுக்காகக் கல்விப் பணியாற்றினார். 1960-ஆம் ஆண்டில் இறைபதம் அடைந்தார்.

Ascensión Sacramento Sánchez Sánchez

Ascensión Sacramento Sánchez Sánchez  பத்து குழந்தைகளில் ஏழாவது குழந்தையாக, ஸ்பெயினில் 1911-இல் பிறந்தார். குழந்தை இயேசுவின் புனித தெரேசா வாழ்க்கையைப் படித்த பிறகு, நற்செய்திப் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். பின்னர் அவர், Cruzada Evangélica என்ற பொதுநிலை அமைப்பின் நிறுவுனர் அருள்பணியாளார் Doroteo Hernández Vera இணைந்து பணியாற்றினார். இவர் 1946-ஆம் ஆண்டு தனது 35 வயதில் டைபாய்டு காய்ச்சலால் இறந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2024, 15:25