மேற்கிந்திய தீவுகளின் கர்தினால் எட்வர்ட் பெலிக்ஸ் காலமானார்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மேற்கிந்திய தீவுக்கூட்டத்தின் castriesன் முன்னாள் பேராயர், கர்தினால் Kelvin Edward Felix அவர்களின் மரணத்தையொட்டி தன் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
castries பெருமறைமாவட்டத்திற்கு திருத்தந்தையால் அனுப்பப்பட்டுள்ள இரங்கல் தந்தி, அப்பெருமறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் விசுவாசிகளுக்கும் மேற்கிந்திய திருஅவை முழுவதற்கும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக உரைக்கிறது.
இளையோரின் கல்விக்கு, குறிப்பாக கரீபியன் பகுதியில் கர்தினாலின் பணிகளுக்கு தன் பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
மேற்கிந்திய தீவுகளின் Antilles பகுதியில் Roseau என்னுமிடத்தில் 1933ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி பிறந்த கெல்வின் எட்வர்ட் பெலிக்ஸ் அவர்கள், 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டார்.
91 வயதான கர்தினால் எட்வர்ட் பெலிக்ஸ் அவர்கள் மே மாதம் 30ஆம் தேதி வியாழக்கிழமையன்று இறைபதம் சேர்ந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்