புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம்   (AFP or licensors)

ஜூலை மாத விடுமுறையில் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூலை மாதத்தில் புதன் பொது மறைக்கல்வியுரை மற்றும் பெரும்பாலான செயல்பாடுகளிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளும் திருத்தந்தை.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை மாதம் முழுவதும், புனித பேதுரு சதுக்கத்தில் ஒவ்வொரு வாரமும்  நடைபெறும் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை மற்றும் பெரும்பாலான செயல்பாடுகளிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்வார் என்று திருத்தந்தையின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் பெரும்பாலான பணிகள் மற்றும் பார்வையாளர்கள் சந்திப்புகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டுகளில் செய்ததுபோல, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை மட்டும் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரை ஆகஸ்ட் மாதம் 7-ஆம் நாள் மீண்டும் துவங்கும் என்றும், உரோமை நகரின் கடுமையான வெப்பத்தைக் கருத்தில்கொண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இந்நிகழ்வுகள் வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் இரண்டு திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 2 முதல் 13 முடிய ஆசியா மற்றும் ஓசியானியா பகுதிகளுக்கும், அம்மாதத்தின் இறுதியில், அதாவது, 26 முதல் 29 முடிய பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பர்க் நாடுகளுக்கும் செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2024, 14:42