Triesteயில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத் திட்டங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இத்தாலியின் ஐம்பதாவது கத்தோலிக்க சமூக வாரத்தையொட்டி, வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி இத்தாலியின் வடகிழக்கு நகரான Triesteயில் ஒரு நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அண்மையில் இத்தாலிய நகர்களான வெனிஸ் மற்றும் வெரோனாவில் ஒரு நாள் பயணங்களை மேற்கொண்ட திருத்தந்தை, வரும் வாரம் ஜி7 கூட்டத்தையொட்டி இத்தாலியின் பாரி நகருக்குச் செல்வதுடன், ஜூலை 7ஆம் தேதி திரியெஸ்தே நகரில் திருப்பயணம் மேற்கொள்வார்.
ஸ்லோவேனியா நாட்டிற்கு அருகிலுள்ள இந்த இத்தாலிய நகருக்குச் செல்லும் திருத்தந்தை, காலை 8 மணிக்கு அந்நகர் வந்து அங்குள்ள கருத்தரங்கு மையத்தில் இத்தாலிய கத்தோலிக்க சமூக வாரத்தில் கலந்துகொள்வோருக்கு உரையொன்று நிகழ்த்துவார்.
பின்னர், கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைகளின் அங்கத்தினர்கள், கல்வியாளார்கள், புலம்பெயர்ந்தோர், மற்றும் மாற்றுத்திறனாளிகளை தனித்தனிக் குழுக்களாகச் சந்திப்பார் திருத்தந்தை.
உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு அந்த கருத்தரங்கிலிருந்து விடைபெற்று Unità d'Italia வளாகம் செல்லும் திருத்தந்தை, அங்கேயே பொது மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றுவார்.
அதன்பின், இத்தாலிய நேரம் 12.30 மணிக்கு திரியெஸ்தே நகரிலிருந்து விடைபெற்று பிற்பகல் 2 மணிக்கு வத்திக்கான் நகர் திரும்புவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 7ஆம் தேதி காலை 6.30 மணிக்கு ஹெலிகாப்டரில் திரியெஸ்தே நகர் நோக்கிச் செல்லும் திருத்தந்தை, அந்நகரில் நான்கரை மணி நேரங்களைச் செலவிட்டு, பிற்பகல் 2 மணிக்கு வத்திக்கான் திரும்புவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்