அருள்பணியாளர்களுடன் உரையாடும் திருத்தந்தை அருள்பணியாளர்களுடன் உரையாடும் திருத்தந்தை   (Vatican Media)

உரோம் மறைமாவட்ட 3-வது அருள்பணியாளர் குழுவைச் சந்தித்த திருத்தந்தை!

160 அருள்பணியாளர்களுடன் பங்குத்தள அருள்பணியாளர்கள், தல நிர்வாகத் தலைவர்கள், மறைமாவட்ட தலைமைச் செயலகங்களின் இயக்குநர்களையும் சந்தித்த திருத்தந்தை அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பாகப் பதிலளித்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சலேசியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் 11 முதல் 39 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்ட 160 பேரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார் என்று செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.

ஜூன் 11, இச்செவ்வாயன்று நிகழ்ந்த இந்தச் சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்றும், இப்பாப்பிறை பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள அரங்கம் ஒன்றில் அருள்பணியாளர்களுடனான இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் உரைக்கின்றது.

160 அருள்பணியாளர்களுடன் பங்குத்தள அருள்பணியாளர்கள், தல நிர்வாகத் தலைவர்கள், மறைமாவட்டத் தலைமைச் செயலகங்களின் இயக்குநர்களையும் சந்தித்த திருத்தந்தை அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குச் சிறப்பாகப் பதிலளித்தார்.

முன்னதாக, பேராசிரியர்கள் (96 வயதான அருள்பணியாளர் உட்பட), மாணவர்கள் மற்றும் உடன்பணியாளர்கள் உட்பட அப்பாப்பிறை பல்கலைக்கழகத்தின் கல்விச் சமூகத்தினருடன் ஏறக்குறைய 15 நிமிடங்களுக்கு உரையாடிய பிறகு உள்ளே சென்றார் திருத்தந்தை.

இம்மேமாதம் 14, செவ்வாயன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலிலுக்கு மிக அருகிலுள்ள Trionfale  புனித வளனார் பங்குத்  தளத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 40 ஆண்டுகளுக்கு முன்பு குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்ட 70 பேரை சந்தித்தார். அதன் பிறகு மே 29, புதனன்று மாலை, புதிதாக அருள்பொழிவு செய்யப்பட்ட, அதாவது, பத்து ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றிய அருள்பணியாளர்களை சந்தித்து உரையாடினார். தற்போது மூன்றாவது குழுவினரைச் சந்தித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2024, 14:41