திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

உங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் கவனித்துக்கொள்ள மறவாதீர்கள்!

அமைதியில் உங்கள் ஆன்மாவிற்குச் செவிசாயுங்கள், உங்கள் இதயத் துடிப்பு ஏற்படுத்தும் ஓசையைப் பின்பற்றி கடவுளிடம் பேசுங்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உங்கள் உடலின் உள்ளிருக்கும் விலைமதிக்க முடியாத பகுதிகளாகிய இதயத்தையும் ஆன்மாவையும் கவனித்துக்கொள்ள மறவாதீர்கள் என்று உலக விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 24, இத்திங்களன்று, பதிவிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு விண்ணப்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியில் உங்கள் ஆன்மாவிற்குச் செவிசாயுங்கள் என்றும் உங்கள் இதயத் துடிப்பு ஏற்படுத்தும் ஓசையைப் பின்பற்றி கடவுளிடம் பேசுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2024, 12:47