திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

தனியாக அல்ல, இணைந்து சிரித்து மகிழ்வோம் : திருத்தந்தை

தற்போது எல்லா மொழிகளையும் சேர்த்து மொத்தம் 5 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் டுவிட்டர் கணக்கில் திருத்தந்தையைப் அவரைப் பின்தொடர்கின்றனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தனியாகச் சிரிப்பதை விட ஒன்றிணைந்து சிறிது மகிழ்வது எளிதானது என்றும், மகிழ்ச்சி என்பது பகிரும் மனதைத் தருகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 14, இவ்வெள்ளியன்று, தான் வழங்கிய டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இணைந்து சிரித்து மகிழ்வது, நம்மிடம் இருப்பதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் திறந்த மனதைத் தருவதுடன், இது சுயநலத்திற்கும் தற்போக்கிற்கும் சிறந்த மாற்று மருந்தாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆங்கில டுவிட்டர் கணக்கில் 1 கோடியே 89 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவரைப் பின்தொடர்கின்றனர். எல்லா மொழிகளையும் சேர்த்து மொத்தம் 5 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அவரைப் பின்தொடர்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2024, 14:52