இயேசுவின் திருஇதய பக்தி இயேசுவின் திருஇதய பக்தி  (AFP or licensors)

துன்புறுவோரை அரவணைப்பது, கடவுளை அன்புகூர்வது

துன்புறுவோர், கைவிடப்பட்டோர், மற்றவர்களால் ஏற்றுகொள்ளப்படாதோர் என அனைவரிலும் இயேசுவின் திருஇதயம் தன் வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நாம் உண்மையில் இறைவனை அன்பு செய்கிறோம் என்றால், நாம் மனித குலத்தின் மீது, அதாவது, ஒவ்வொரு மனிதர்மீதும் பாசம் கலந்த உணர்ச்சியுடையவர்களாகச் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்புறுவோர், கைவிடப்பட்டோர், மற்றவர்களால் ஏற்றுகொள்ளப்படாதோர் என அனைவரிலும் இயேசுவின் திருஇதயம் தன் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பதால், குறிப்பாக இம்மக்களை பாச உணர்வுடன் நெருங்கி அணைப்பது, கடவுளை உண்மையில் அன்புகூர்வதன் வெளிப்பாடாகும் என திருத்தந்தையின் ஜூன் 7, வெள்ளிக்கிழமையின் டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

இயேசுவின் திருஇதயத்திற்கென ஜூன் மாதம் அர்ப்பணிக்கப்பட்டிருப்பதையொட்டி, இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2024, 16:04