பெங்களூரூ உயர் மறைமாவட்ட இலச்சினை பெங்களூரூ உயர் மறைமாவட்ட இலச்சினை 

பெங்களூர் உயர் மறைமாவட்டத்திற்கு துணை ஆயர்கள் நியமனம்

அருள்பணி. ஆரோக்கிய ராஜ் சதீஸ் குமார் மற்றும் அருள்பணி ஜோசப் சூசைநாதன் ஆகிய இருவரையும் பெங்களூர் உயர்மறைமாவட்டத்திற்கான துணை ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இந்தியாவின் பெங்களூர் பெருநகர உயர் மறைமாவட்டத்திற்கு இரண்டு புதிய துணை ஆயர்களையும், வியட்நாமின் Ban Mê Thuôt மறைமாவட்டத்திற்கு புதிய ஆயரையும் நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெங்களூர் உயர்மறைமாவட்ட அதிபர் அருள்பணி. ஆரோக்கிய ராஜ் சதீஸ் குமார் அவர்களையும் திருஇருதய பங்குத்தளத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்பணி ஜோசப் சூசைநாதன் அவர்களையும் துணை ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் வியட்நாமின் Ban Mê Thuôt மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்பணி John Baptist Nguyen Huy Bac அவர்களையும் நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணி. ஆரோக்கிய ராஜ் சதீஸ் குமார்

1977ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் பெங்களூரூவில் பிறந்த அருள்பணி ஆரோக்கியராஜ் சதீஸ்குமார் அவர்கள், புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்று 2007ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் பெங்களூரு மறைமாவட்ட அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

உரோமில் உள்ள உர்பானியானோ திருப்பீடக்கல்லூரியில் திருஅவைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

அருள்பணி ஜோசப் சூசைநாதன்

1964ஆம் ஆண்டு மே 14 அன்று பெங்களூரூவில் பிறந்த அருள்பணி ஜோசப் சூசை நாதன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் குருவாக அருள்பொழிவுபெற்றார். திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் உள்ள புனித பேதுரு குருத்துவக் கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் படித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2024, 12:57