லாகோஸ், நைஜீரியா லாகோஸ், நைஜீரியா  

நைஜீரியாவுக்குப் புதிய திருப்பீடத்தூதரை நியமித்தார் திருத்தந்தை!

நைஜீரியா, ஆப்பிரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசிற்குப் பிறகு அதன் இரண்டாவது பெரிய கத்தோலிக்க மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நைஜீரியாவின் திருப்பீடத் தூதராக அயர்லாந்தின் பேராயர் மைக்கேல் பிரான்சிஸ் குரோட்டி (Michael Francis Crotty) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார் என்று செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.

அண்டை நாடுகளான நைஜர் மற்றும் புர்கினா பாசோவின் முன்னாள் தூதராக, இப்பகுதியில் பணியாற்றிய விரிவான அனுபவம் பேராயர் குரோட்டி அவர்களுக்கு உள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நைஜீரியா, ஆப்பிரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசிற்குப் பிறகு அதன் இரண்டாவது பெரிய கத்தோலிக்க மக்கள் தொகையைக் கொண்டுள்ளது அதில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக வடக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்பதும், பணத்திற்காக அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவறத்தார் அடிக்கடி கடத்தப்பட்டு மீட்கப்படுகின்றனர் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2024, 14:18