ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள் மருத்துவமனை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள் மருத்துவமனை 

வன்முறைகளின் அதிகரிப்பு குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை

மோதல்கள் முடிவுக்கு வருவதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட திருத்தந்தை தொடர்ந்து செபிப்பதாக திருப்பீடச் செய்தித் தொடர்புத்துறையின் அறிக்கை உரைக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் மிகப்பெரும் குழந்தைகள் மருத்துவமனை உட்பட இரு மருத்துவ மையங்கள் தாக்கப்பட்டது, மற்றும் காசாவின் கல்வி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக திருப்பீடச் செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஜூலை 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று இதனைத் தெரிவித்த திருப்பீடச் செய்தி தொடர்பகம், வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவது குறித்து மிக ஆழமான முறையில் கவலை கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமுற்ற அப்பாவி மக்களுக்காக செபிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மோதல்கள் முடிவுக்கு வருவதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என திருத்தந்தை தொடர்ந்து செபிப்பதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்புத்துறையின் அறிக்கை கூறுகிறது.

காசா பகுதியிலுள்ள Holy Family கத்தோலிக்கப் பள்ளி இஸ்ராயேல் துருப்புக்களால் ஜூலை 7ஆம் தேதி தாக்கப்பட்டதில், அதில் அடைக்கலம் தேடியிருந்தோரில் 4 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைனின் கீவ் நகரில் ஜூலை 8, திங்களன்று இரஷ்ய துருப்புக்களால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டின் மிகப்பெரும் குழந்தைகள் மருத்துமனை 60 முதல் 70 விழுக்காடு சேதமடைந்துள்ளது.

இந்த ஏவுகணைத் தாக்குதலில் அம்மருத்துவமனைக்கு அருகில் இருந்த மருத்துவ மையமும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2024, 15:10