கடந்த ஆண்டு உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர் நாள் திருப்பலியில் முதியவரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஆண்டு உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர் நாள் திருப்பலியில் முதியவரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

முதியோர் ஆற்றும் அளப்பரியப் பங்கினை உணர்ந்து வாழ்வோம்

முதியோர் வழியாக ஏராளமான கொடைகளையும், அருளையும் ஆசீரையும் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும். - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

முதியோருடன் நெருக்கமாக இருந்து அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இதன் வழியாகக் குடும்பம், சமுதாயம், தலத்திருஅவை போன்றவற்றில் அவர்கள் ஆற்றும் முக்கியமான பங்கினை நாம் உணர்ந்து கொள்ள முடியும் என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வரும் ஜூலை 28 ஞாயிற்றுக்கிழமை திருஅவையில் கொண்டாடப்பட இருக்கும் நான்காவது உலக தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் நாளை முன்னிட்டு ஜூலை 27 சனிக்கிழமை ஹேஸ்டாக் தாத்தா பாட்டிகள், முதியோர் என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்திகளாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாத்தாக்கள், பாட்டிகள், முதியோர் போன்றோருடன் நெருக்கமாக இருப்பதன் வழியாக குடும்பத்திலும், சமூகத்திலும், தலத்திருஅவையிலும் அவர்கள் கொடுத்துவரும் மிகப்பெரிய பங்கினை நாம் உணர்ந்துகொள்ள முடியும் என்றும், இத்தகைய முதியோர் வழியாக ஏராளமான கொடைகளையும், அருளையும் ஆசீரையும் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதியோர் மேல் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்திலும் சமுதாயத்திலும் தலத்திருஅவையிலும் அவர்கள் மாண்போடு நடத்தப்பட வேண்டும், மரியாதையோடு கவனிக்கப்படவேண்டும் என பல முறை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2024, 15:45