இப்பூமியின் அழுகுரலுக்கு செவிமடுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இயற்கைப் பேரிடர் மற்றும் காலநிலை நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அழுகுரலுக்கும், இப்பூமியின் அழுகுரலுக்கும் நாம் அனைவரும் செவிமடுக்க வேண்டும் என இறைவேண்டல் செய்வோம் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.
செப்டம்பர் மாதத்திற்கான செபக்கருத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் 30, வெள்ளிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூமியின் அழுகுரலுக்கு செவிமடுப்போம் என்ற விண்ணப்பத்துடன், நாம் வாழும் இப்பூவுலகின் அக்கறைக்கென தனிப்பட்டவிதத்தில் அர்ப்பணத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளார்.
திருத்தந்தையின் செப்டம்பர் மாத செபக்கருத்து சுற்றுச்சூழலை மையம் கொண்டதாக இருப்பதும், கத்தோலிக்க திருஅவையில் செப்டம்பர் முதல் தேதி, படைப்பு மீது அக்கறைக்கான செப நாள் சிறப்பிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்