Laudato si உயர்கல்வி மையத்தின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை Laudato si உயர்கல்வி மையத்தின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை   (Vatican Media)

Borgo Laudato si உயர்கல்வி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது!

திராட்சை இரச உற்பத்திக்கான புதிய திராட்சைத் தோட்டத்தின் வளர்ச்சி போர்கோவின் (Borgo) விவசாயத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. போர்கோவின் ‘வர்த்தக முத்திரை’ என்று அவர்கள் சொல்வது போல், இது பாரம்பரியம் மற்றும் படைக்கும் திறனின் தொகுப்பாக நிற்கும் நோக்கம் கொண்டது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சூழலியல் மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான விருப்பத்தை காணக் கூடியதாகவும் உறுதியானதாகவும் மாற்றுவதற்காக, சிந்தனை, அமைப்பு மற்றும் செயலின் உறுதியான மாதிரியை உருவாக்க நினைத்து, அதற்கு நான் Borgo Laudato si' என்று பெயரிட்டேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 19, வியாழன் இன்று, Laudato si' என்ற உயர்கல்வி மையத்தின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, காஸ்தல் கண்டோல்ஃபோ தான் (Castel Gandolfo) இந்த வகையான ஆய்வுகளை நடத்துவதற்கான சரியான இடம் என்று தான் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உயர் கல்விக்கான Laudato si' மையத்தை அறிவியல், கல்வி மற்றும் சமூக நடவடிக்கை அமைப்பாக தான் நிறுவியதாகவும் அவர்களிடம் தெரிவித்தார் திருத்தந்தை.

மேலும் இது அதன் சொந்த பாரம்பரிய, தொழில்நுட்ப, நிர்வாக மற்றும் கணக்கியல் தன்னாட்சியைக் கொண்டுள்ளது என்றும், நிலையான பொருளாதாரத்தின் கட்டமைப்பிற்குள் மற்றும் Laudato si திருமடலின்  நெறிமுறைகளின்படி ஒரு நபரின் ஒருங்கிணைந்த உருவாக்கத்திற்காக செயல்படுகிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

நிறுவப்பட்ட சில மாதங்களிலேயே, உயர் கல்விக்கான மையம் ‘போர்கோ’ (Borgo) திட்டத்தை உருவாக்க வேலை செய்யத் தொடங்கியது என்றும், சிறந்த தேசிய மற்றும் பன்னாட்டு நிபுணர்களின் உதவியுடன் இம்மையமானது,  ஒருங்கிணைந்த சூழலியல், வட்ட மற்றும் உற்பத்தி பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் மூன்று முக்கிய திசைகளை கோடிட்டுக் காட்டியது என்றும் விளக்கினார்  திருத்தந்தை.

திராட்சை இரச உற்பத்திக்கான புதிய திராட்சைத் தோட்டத்தின் வளர்ச்சி போர்கோவின் விவசாயத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. போர்கோவின் ‘வர்த்தக முத்திரை’ என்று அவர்கள் சொல்வது போல், இது பாரம்பரியம் மற்றும் படைக்கும் திறனின் தொகுப்பாக நிற்கும் நோக்கம் கொண்டது என்றும் விளக்கிய திருத்தந்தை, இதிலும், Centro di Alta Formazione எனப்படும் உயர் பயிற்சி மையம் சில முன்னணி நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுள்ளது, ஏனெனில் வெகு சிறப்பாக செயல்படவேண்டும் என்பதே இதன் நோக்கமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சாகுபடி மற்றும் விவசாய உற்பத்தி இரண்டிற்கும், குறிப்பாக, திராட்சைத் தோட்டத்திற்கு கணிசமான அளவுக்கு உழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை நான் குறிப்பாக வரவேற்கிறேன் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

படைப்பாளரால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டதைக் கவனித்துப் போற்றுகின்ற உழைப்பின் வழியாக, மனித குடும்பத்திற்கும் படைப்பிற்கும் இடையே நல்ல மற்றும் பலனளிக்கும் உறவுகளை மீட்டெடுப்பதற்குத் தொடக்கத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட நோக்கத்திற்கு இது பதிலளிக்கிறது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார் திருத்தந்தை.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2024, 16:18