தூய யோசேப்பு இல்லத்தில்  திருத்தந்தை பிரான்சிஸ் தூய யோசேப்பு இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

தூய யோசேப்பு முதியோர் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

தூய யோசேப்பு இல்லமானது ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபையினரால் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வில்லத்தில் பொருளாதார வசதி குறைபாடுடைய முதியோர்கள், குணப்படுத்த முடியாத கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 27 காலை பெல்ஜியம் நாட்டின் அரசு மாளிகையில் நாட்டின் அரசர் பிலிப்போ அரசி மத்தில்தே ஆகியோருடன் அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புரூக்செல்ஸின் மரோல்ஸ் நகரில் உள்ள முதியோர்கள் மற்றும் நோயாளிகள் இருக்கும் தூய யோசேப்பு இல்லம் சென்றார். திருத்தந்தையின் பயணத்திட்டங்களில் இடம்பெறாத இந்நிகழ்வானது அவ்வில்லத்தில் இருந்த ஏழைகள் ஆதரவற்றோர் முதியோர் மற்றும் நோயாளிகளின் உள்ளத்தைக் கவர்ந்தது. இவ்வில்லமானது ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபையினரால் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வில்லத்தில் பொருளாதார வசதி குறைபாடுடைய முதியோர்கள், குணப்படுத்த முடியாத கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்.

அவ்வில்லத்தில் நுழைந்த திருத்தந்தையை அங்கிருந்தவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி வாழ்த்தினர். அவர்கள் மத்தியில் வந்த திருத்தந்தை அனைவரையும் பார்த்து  நான் உங்களுக்காக செபிக்கின்றேன் நீங்கள் எனக்காக செபியுங்கள் என்று கூறினார். அங்குக்கூடியிருந்த அனைவரும் அதற்கு உறுதியளித்தனர். எதிர்பாராத இந்த சந்திப்பினால் அனைவரும் மகிழ்ந்தனர் குறுகிய நேர இந்தச்சந்திப்பானது சிறு செபத்துடன் நிறைவுக்கு வந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2024, 15:03